பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகராக இருப்பவர் அமிதாப் பச்சன். இவருடைய மனைவி ஜெயா பச்சன். இவர் சமாஜ்வாதி கட்சியின் நாடாளுமன்ற எம்பி ஆவார். இந்நிலையில் நேற்று நாடாளுமன்ற மாநிலங்களவை கூட்டத்தொடர் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயன் சிங் ஜெயா அமிதாப்பச்சன் என்று அழைத்தார்.

அப்போது குறுக்கிட்ட அவர் என்னை ஜெயா அமிதாபச்சன் என்று அழைக்க வேண்டாம். ஜெயா பச்சன் என்று அழைத்தால் மட்டுமே போதும். கணவரின் பெயர்களை வைத்து பெண்களை அழைக்கும் முறை புதியதாக இருக்கிறது. கணவரின் பெயரைத் தவிர பெண்களுக்கு எந்த ஒரு சுயமான சாதனையும் இல்லாதது போன்று பார்க்கிறார்கள் என்று கூறினார். இதற்கு அவர் உங்கள் அதிகாரப்பூர்வ ஆவணத்தில் இருக்கும் பெயரைதான் அழைத்ததாக கூறினார். மேலும் இது தொடர்பான வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.