
மகனின் மருத்துவ செலவுக்காக பிரியாணி சாப்பிட்ட தந்தை!
கோயம்புத்தூர் ரயில் நிலையம் அருகே உள்ள ஒரு தனியார் உணவகத்தில் நடந்த வித்தியாசமான போட்டி ஒன்று சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பெட்டி வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த உணவகத்தில் சிக்கன் பிரியாணி சாப்பிடும் போட்டி நடத்தப்பட்டுள்ளது.
இந்த போட்டியில், அரை மணி நேரத்தில் 6 பிரியாணி சாப்பிட்டால் ஒரு லட்சம் ரூபாய், 5 பிரியாணி சாப்பிட்டால் 50 ஆயிரம் ரூபாய் என பரிசு தொகை அறிவிக்கப்பட்டது. இந்த போட்டியில் கலந்து கொண்ட ஒரு தந்தை, தனது மகனின் மருத்துவ செலவுக்காக இரண்டாம் இடம் பிடித்து 50 ஆயிரம் ரூபாய் பரிசை வென்றுள்ளார். போட்டியின் போது, தனது மகனை நினைத்து அழுது கொண்டே பிரியாணி சாப்பிட்டுக் கொண்டிருந்த இந்த தந்தையின் காட்சிகள் கண்களை கலங்க வைக்கின்றன.இவரது கதை, சமூக வலைதளங்களில் வைரலாகி, பலராலும் பகிரப்பட்டு வருகிறது.