தென்காசி மாவட்டத்தில் உள்ள சிவகிரி அம்பேத்கர் தெற்கு தெருவில் ராமேஸ்வரன்-பாஞ்சாலி தம்பதியினர் வசித்து வருகின்றனர். கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பாஞ்சாலி சிவகிரி மெயின் ரோட்டில் இருக்கும் கடைக்கு நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த நபர் அவரை கத்தியால் சரமாரியாக குத்தி விட்டு தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த பாஞ்சாலி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் கூலித் தொழிலாளியான சமுத்திரவேல் என்பவரை பிடித்து விசாரித்ததில்  திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.

கணவரை பிரிந்து வாழ்ந்த பாஞ்சாலிக்கும் சமுத்திர வேலுக்கும் தொடர்பு இருந்துள்ளது. அவர் தனது விருப்பத்திற்கு இணங்குமாறு பாஞ்சாலியை வற்புறுத்தியுள்ளார். ஆனால் மகன்கள் வளர்ந்து விட்டதால் பாஞ்சாலி சமுத்திரவேலின் விருப்பத்திற்கு இணங்க மறுத்துள்ளார். பாஞ்சாலி கடைக்கு சென்றபோதும் சமுத்திரவேல் அவரை பின்தொடர்ந்து உல்லாசத்திற்கு அழைத்துள்ளார். அப்போதும் பாஞ்சாலி மறுப்பு தெரிவித்ததால் அவரை கத்தியால் குத்திக் கொலை செய்தது விசாரணையில் தெரியவந்தது. இதனால் போலீசார் சமுத்திர வேலை நீதிமன்றத்தில் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.