நேற்று கிறிஸ்துமஸ் பண்டிகை அனைவருக்கும் மகிழ்ச்சியானதாக அமைந்திருக்கும். ஆனால் திரிஷாவின் வீட்டில் மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் ஒட்டுமொத்த குடும்பமும் உடைந்து போய் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இது குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்ட திரிசா அதில் “எனது மகன் சோரோ கிறிஸ்துமஸ் அன்று அதிகாலையில் உயிரிழந்து விட்டான். என்னை நன்கு அறிந்தவர்களுக்கு இனிமேல் என் வாழ்க்கையின் அர்த்தம் பூஜ்ஜியமே என்று தெரியும்.நானும் எனது குடும்பமும் உடைந்து அதிர்ச்சியில் உள்ளோம். சிறிது காலம் வேலையில் இருந்து ஒதுங்கி இருக்க போகிறேன்” என குறிப்பிட்டார்.