
பீகார் மாநிலத்தில் நடந்த ஒரு சம்பவம் தற்போது மனிதநேயத்தையே உலுக்குவதாக அமைந்துள்ளது. அதாவது ஏழ்மை நிலையில் உள்ள ஒரு தந்தை தன்னுடைய 5 வயது மகனுக்கு உடல்நலம் சரியில்லாததால் உடனடியாக அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றுள்ளார். ஆனால் உடனடியாக சிறுவனுக்கு மருத்துவ சிகிச்சைகள் எதுவும் கிடைக்கவில்லை. இதனால் அந்த சிறுவன் ஹாஸ்பிடல் படுக்கயிலையே உயிரிழந்தான். பின்னர் தன் மகனின் சடலத்தை ஊருக்கு கொண்டு செல்ல ஆம்புலன்ஸ் உதவியை எதிர்பார்த்தபோதில் அந்த மருத்துவமனை நிர்வாகம் அந்த உதவியை செய்து கொடுக்கவில்லை.
“हाँ, जो पिता के कंधे पर लटक रही है ना… वो सिर्फ़ एक मासूम की लाश नहीं है,
वो बिहार के ‘सुशासन’ की भी लाश है।”
मुज़फ्फरपुर के किसी सरकारी अस्पताल की वो दिल दहला देने वाली तस्वीर जहाँ एक पिता अपने बेटे की लाश को खुद कंधे पर उठाकर घूम रहा है वो सिर्फ़ एक दुखद क्षण नहीं, बल्कि उस… pic.twitter.com/OzVueycSjG— Deepak Jha (@speaks_deepak) April 18, 2025
இதனால் தன் மகனின் சடலத்தை தோளில் சுமந்தபடி அந்த தந்தை கண்ணீரோடு கதறி அழுதபடி செல்கிறான். அவர் தன் மகனின் சடலத்தை மார்போடு அனைத்து வைத்து பேட்டா பேட்டா என் அழுது கொண்டே பைக்கில் செல்லும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி மனதை உலுக்குவதாக அமைந்ததோடு பலரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்துள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வரும் நிலையில் பலரும் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருவதோடு அரசு மருத்துவமனை மீது பல்வேறு குற்றசாட்டுகளை முன்வைக்கிறார்கள். மேலும் இது தொடர்பாக முதல்வர் நிதீஷ்குமார் கண்டிப்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.