
தூத்துக்குடி மாவட்டம் காயல்பட்டினம் விசாலாட்சி அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் பாண்டியன். இவர் பெயிண்டராக வேலை பார்த்து வந்துள்ளார். இவருக்கு வேல்பாண்டி, முத்துராமலிங்கம் என்ற மகன்களும், வேணி என்ற மகளும் உள்ளனர்.
கடந்த 6 மாதத்திற்கு முன்பு ஒரு விபத்தில் வேணியின் கணவர் சின்னதுரை உயிரிழந்ததால் மன உளைச்சலில் பாண்டியன் மது குடிக்கும் பழக்கத்திற்கு அடிமையானார்.
கடந்த 20-ஆம் தேதி மதுவில் பூச்சிக்கொல்லி மருந்தை கலந்து குடித்து உயிருக்கு போராடிக் கொண்டிருந்த பாண்டியனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் பாண்டியன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.