
உத்திரபிரதேச மாநிலம் கரவுண்டா சவுத்ரி கிராமத்தில் 23 வயதுடைய இளம்பெண் வசித்து வந்துள்ளார். இவருக்கு வருகிற மே மாதம் 1-ஆம் தேதி திருமணம் நடைபெறுவதாக இருந்தது. நேற்று காலை அந்த இளம்பெண் தனது தந்தை மற்றும் சகோதரியுடன் ஷாப்பிங் செய்வதற்காக சென்றுள்ளார்.
அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த ஷிவாங் தியாகி என்ற வாலிபர் இளம்பெண்ணை சுட்டுக்கொலை செய்தார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது.
அந்த வாலிபர் கல்லூரியில் படிக்கும் போது இளம்பெண்ணுடன் நட்பாக பழகியுள்ளார். பின்னர் இளம்பெண் மீது ஆசைப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வாலிபர் இளம்பெண்ணிடம் கூறியுள்ளார். அதற்கு இளம்பெண் மறுப்பு தெரிவித்தார்.
சமீபத்தில் அந்த இளம்பெண்ணுக்கு அவருக்கு வேறு ஒருவருடன் திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டது. இதனால் கோபத்தில் ஷிவாங் தியாகி இளம்பெண்ணை சுட்டு கொலை செய்தது தெரியவந்தது.
இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் ஷிவாங் தியாகியை கைது செய்தனர். இளம்பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்திற்கு பிஸியாக இருந்த நேரத்தில் இப்படி ஒரு பேரழிவு எங்கள் வீட்டில் ஏற்படும் என நினைக்கவே இல்லை என கதறி அழுதனர்.