
விராட் கோலி சமீபத்திய நேர்காணல் ஒன்றில் தனது மகள் குறித்து சுவாரசியமான தகவல் ஒன்றை அளித்துள்ளார். மே 18 ஆன இன்று இந்தியாவே எதிர்பார்க்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுர் அணியின் சூடு பறக்கும் ஆட்டம் நடைபெற உள்ளது. இந்த ஆட்டத்தில் வெற்றி பெறும் அணி பிளே ஆப் சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை பெறும். அதிலும், ஆர்சிபி அணி 18 ரன்கள் வித்தியாசத்தில் அல்லது 18.1 ஓவர்களுக்குள் ஆட்டத்தை வென்றால் மட்டுமே அவர்கள் உள்ளே நுழைவதற்கான வாய்ப்பு அதிகம்.
இந்நிலையில் போட்டி குறித்து பல தகவல்கள் இணையதளத்தில் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருக்கின்றனர். இந்நேரத்தில் விராட் கோலி அவர்களின் நேர்காணல் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வைரலாகி வருகிறது. அதில் எதிரே இருக்கும் தொகுப்பாளர் உங்களது மகள் எப்படி இருக்கிறார் என்ன கேட்ட கேள்விக்கு அவர் நன்றாக இருக்கிறார். தற்போது விளையாடும் பருவத்தில் உள்ளார். கிரிக்கெட் பேட்டை கையில் எடுத்து விளையாட மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருக்கிறார் என தெரிவித்துள்ளார்.
இதை கண்ட அவரது ரசிகர்கள் உடனடியாக கமெண்ட் பகுதிக்கு சென்று ஆண்களுக்கான ஐபிஎல் போன்று பெண்களுக்காக நடைபெறும் விளையாட்டான WPL ல் வருங்காலத்தில் கண்டிப்பாக வாமிகா இடம் பெறுவார் என குதூகளிப்புடன் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர். அதேபோல் தொகுப்பாளரும் உங்களுக்கு மகன் மற்றும் மகள் இருவர் உள்ளனர். ஒருவர் WPL க்காக இன்னொருவர் ஐபிஎல் க்காக என கூற அதைக் கேட்ட விராட் கோலி மகிழிச்சியுடன் புன்னகைக்கும் வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram