தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் நடிப்பில் கடந்த வருடம் கட்டா குஸ்தி என்ற திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தொடர்ந்து தற்போது ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால் சலாம் படத்தில் விஷ்ணு விஷால் முக்கிய வேடத்தில் நடித்த வருகிறார். நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஏற்கனவே திருமணம் ஆகி ஒரு குழந்தை இருக்கும் நிலையில் முதல் மனைவியை விவாகரத்து செய்துவிட்டார். அதன் பிறகு ஜுவாலா கட்டா என்பவரை விஷ்ணு விஷால் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டார். நடிகர் விஷ்ணு விஷால் சமீபத்தில் போட்ட ஒரு ட்விட்டர் பதிவை பார்த்து அவர் தன் இரண்டாவது மனைவியை விவாகரத்து செய்ய முடிவெடுத்து விட்டதாக இணையதளத்தில் தகவல்கள் தீயாக பரவியது.

இந்நிலையில் இரண்டாவது மனைவி விவாகரத்து செய்வது குறித்து நடிகர் விஷ்ணு விஷால் தற்போது விளக்கம் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில், நான் என்னுடைய ப்ரொபஷனல் வாழ்க்கையை பற்றி தான் குறிப்பிட்டேன். அதற்குள் விவாகரத்து என்ற செய்தி போட்டு விட்டார்கள். ஒருவருக்கு நாம் கொடுக்கும் மிகப்பெரிய கிஃப்ட் நம்பிக்கை. ஆனால் தோற்று விட்டால் நாம் நம்மையே குறை சொல்கிறோம். அவ்வளவு கடினமாக இருக்க தேவை இல்லை. நான் இதை தான் சொல்ல வந்தேன். ஆனால் அதற்குள் விவாகரத்து என்று செய்தி வந்துவிட்டது என்று பதிவிட்டுள்ளார். மேலும் விஷ்ணு விஷாலின் இந்த பதிவின் மூலம் தற்போது இரண்டாவது மனைவி விவாகரத்து குறித்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.