
சென்னை மாவட்டம் புளியந்தோப்பு கேnபி பார்க் பகுதியை சேர்ந்தவர் பாலு(50). இவர் ஆட்டோ ஓட்டுனர். இவரது மனைவி வள்ளி(42). இவர்கள் தங்களது மகன் கார்த்திக் மருமகள் அஞ்சலை(25) ஆகியோருடன் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை கார்த்திக் மற்றும் அவரது தந்தை பாலுவிற்கு இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது கார்த்திக் திடீரென அக்கம் பக்கத்தினரை அழைத்து போதையில் அப்பா தன்னை தானே கத்தியால் குத்திக் கொண்டார் என கூறியுள்ளார்.
இதனால் அக்கம் பக்கத்தினர் பாலுவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பாலு உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் கார்த்திக்கை பிடித்து விசாரணை நடத்திய போது அதிர்ச்சி தகவல் தெரியவந்தது.
அதாவது பாலு தனது மனைவி வள்ளியையும் மருமகள் அஞ்சலையையும் பக்கத்து வீட்டில் வசிக்கும் ஆண்களோடு தொடர்பு படுத்தி கேவலமாக பேசி உள்ளார். இதனை கார்த்திக் கண்டித்தார்.
இருப்பினும் தொடர்ந்து கேட்காமல் பாலு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் கார்த்திக் ஹெல்மெட்டால் தந்தையின் தலையில் அடித்து காய்கறி வெட்டும் கத்தியால் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.