
திருப்பத்தூர் மாவட்டம் கந்திலி அருகே நரியனேரியை சேர்ந்த ராமன் (30) என்பவர் சென்னையில் பானிபூரி கடை வைத்துள்ளார். இவருக்கு சூர்யா என்ற மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இந்த நிலையில் தம்பதியினர் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்த நிலையில் நேற்று முன்தினம் ராமன் சென்னையிலிருந்து வீடு திரும்பி உள்ளார். ராமனுக்கும் சூர்யாவிற்கும் இரவில் திடீரென்று தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த ராமன் மனைவியின் கழுத்தை நெறித்த நிலையில் மயக்கமடைந்து சூர்யா கீழே விழுந்தார்.
இதனால் பதற்றம் அடைந்த ராமன் செய்வதறியாமல் அக்கம் பக்கத்தினரிடம் மனைவி சூர்யா தூக்கு போட்டுக் கொண்டதாக கூறியுள்ளார். இதனால் பதற்றம் அடைந்த அவர்கள் சூர்யாவை மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் சூர்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ராமனிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் சூர்யாவை கழுத்தை நெறித்து கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக நாடகம் ஆடியது வெளிச்சத்திற்கு வந்தது. இதனை தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்துள்ளனர்.