உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள மீரட் நகரில் சமீபகாலமாக கள்ளக்காதலனுடன் தொடர்பு வைத்துக்கொண்டு மனைவிகள் கணவன்களை கொல்லும் சம்பவங்கள் குறித்து செய்திகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. அதாவது சமீப காலமாக கள்ளக்காதல் விவகாரங்களால் கணவன்கள் கொல்லப்படும் செய்திகள் அடிக்கடி வெளி வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது ஒரு கணவன் தன் மனைவி மீது நேரடியாகவே கொலை சதி புகார் கொடுத்துள்ளார். அதாவது மீரட் நகரில் முஸ்கான் என்பவர் தன் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை 15 துண்டுகளாக வெட்டி நீல நிற ட்ரம்மில் போட்டு சிமெண்ட் பூசி கொலை செய்த நிலையில் மற்றொரு பெண் தன் கணவனை கள்ளக்காதலனுடன் சேர்ந்து கொலை செய்துவிட்டு பின்னர் பாம்பு கடித்து இறந்து விட்டதாக நாடகமாடினார்.

இதுபோன்று மற்றொரு சம்பவமும் நடந்தது. இந்நிலையில் தற்போது மீரட் நகரை சேர்ந்த காரவ் ஷர்மா என்பவர் தன்னுடைய மனைவி ரிதன்ஷி ஷர்மா மீது ஒழுக்கமற்ற நடத்தை மற்றும் கொலை மிரட்டல் போன்ற குற்றச்சாட்டுகளை முன்வைத்து போலீஸ் ஸ்டேஷனில் புகார் கொடுத்துள்ளார். அதாவது காரவ் ஒரு நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வரும் நிலையில் இவர்களுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டில் திருமணம் நடைபெற்றது. தற்போது 12 வயதில் ஒரு குழந்தை இருக்கும் நிலையில் திருமணம் ஆகி ஒரு வருடத்திற்கு பிறகு அவருடைய மனைவியின் நடத்தையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தனிக்குடித்தினம் சென்றபோதிலும் அவர் மனைவி நடத்தையில் மாற்றமில்லை. ரிதன்ஷி ஆலிஷ் அலையஸ் சன்னி, ராஜ் வர்மா, லவ் சௌகான், குல்தீப் சவுத்ரி, அம்மன் சிங் ஆகியோர்களுடன் தகாத உறவில் இருப்பதாகவும் இதற்கான 1200 பக்க ஸ்கிரீன் ஷாட்டுகள் மற்றும் வீடியோ ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் காரவ் கூறியுள்ளார். அதோடு அவருடைய மனைவி 2 துப்பாக்கிகளை வைத்துள்ளதாகவும் தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து தன்னை கொலை செய்துவிட்டு 40 லட்சம் காப்பீடு தொகையை பெற திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளதோடு கடந்த 2013 ஆம் ஆண்டு தன் குடும்பத்தின் மீது அவர் பொய்யான புகார் கொடுத்ததாகவும் கூறியுள்ளார். இந்த புகாரால் அவருடைய மனைவியின் தந்தை மற்றும் சகோதரருக்கு 5 லட்ச ரூபாய் ரொக்க பணம் மற்றும் தங்கம் போன்றவைகளை கொடுத்துள்ளார்.

இருப்பினும் அவரின் மனைவியின் நடத்தையில் மாற்றம் இல்லாத நிலையில் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் அவருடைய மனைவி தன்னையும் தன் தாயார் மற்றும் சகோதரியும் திட்டி தாக்கி விட்டு வீட்டை விட்டு சென்றதாக கூறியுள்ளார். மேலும் சௌரப் போன்று தானும் கொலை செய்யப்படலாம் என்றும் எனவே தன்னுடைய உயிருக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும் என்றும் அவர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ள நிலையில், அது தொடர்பாக போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.