தென்னிந்திய திரை உலகில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர் தான் நடிகை தமன்னா. இவர் இறுதியாக ஜெயிலர் திரைப்படத்தில் காவலா பாட்டுக்கு நடனமாடி ஒட்டுமொத்த ரசிகர்களையும் கவர்ந்தார். இதனைத் தொடர்ந்து இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளன. பாலிவுட் நடிகர் விஜய் வர்மாவை காதலித்து வரும் தமன்னா தன்னுடைய திருமணம் குறித்து சுவாரஸ்யமான கருத்துக்களை பகிர்ந்துள்ளது.

தற்போது கெரியரில் ஒரு பெரிய கட்டத்தில் இருந்தாலும் வித்தியாசமான வேடங்களில் நடிக்க வாய்ப்புகள் வருகின்றன. என்னுடைய முழு கவனமும் எனது சினிமாவில் தான் உள்ளது. திருமணத்தை பொருத்தவரையில் திருமண அமைப்பில் முழு நம்பிக்கை உள்ளது எனவும் இப்போது திருமணம் செய்யும் எண்ணம் இல்லை எனவும் தமன்னா வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.