திருநெல்வேலி மாவட்டம் களக்காடு பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி அமைந்துள்ளது. இந்த பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு மாவடி புத்தூரை சேர்ந்த மோகன் என்பவர் ஆசிரியராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் 8- ஆம் வகுப்பு படிக்கும் மாணவியிடம் மோகன் தனது அறைக்கு வருமாறு கூறியுள்ளார். அந்த மாணவி அங்கு சென்றதும் மோகன் பாலியல் ரீதியாக மாணவிக்கு தொந்தரவு அளித்துள்ளார்.

இதனால் அலறியடித்து கொண்டு ஓடி வந்த மாணவி மாலை வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த மாணவியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குபதிவு செய்து போலீசார் மோகனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.