
சீனாவின் ஹுனான் மாகாணம், சாங்ஷா நகரத்தில் உள்ள யுஹுவா மாவட்டத்தில் உள்ள ஹோட்டலில், காதலியுடன் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாக, ஒரு இளைஞர் ஹோட்டல் ஜன்னல் வழியாக பாய்ந்து கீழே குதித்த அதிர்ச்சிக் காட்சி தற்போது சமூக ஊடகங்களில் தீவிரமாக வைரலாகி வருகிறது. இந்த சம்பவம் ஏப்ரல் 16ஆம் தேதி அதிகாலை 1 மணியளவில் நிகழ்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் அந்த வீடியோவில், ஹோட்டலின் முதல் மாடியில் காதல் ஜோடி ஒருவருக்குள் கடும் வாக்குவாதம் நடைபெறுவது காணப்படுகிறது. பின்னர், அந்த இளைஞர் தன் பையில் இருந்த பொருட்களை கீழே வீசி விட்டு, ஜன்னலை உடைத்துவிட்டு வெளியில் குதிக்கும் காட்சிகள் பதிவாகியுள்ளன. காதலி அவர் செய்யும் செயல்களை தடுக்க முயன்றாலும், அவர் குதித்துவிட்டார். இவை அனைத்தும் வீடியோவில் தெளிவாக பதிவாகியுள்ளது.
NEW: Chinese man jumps through a hotel window after getting into a heated argument with his girlfriend.
The hotel staff confirmed the incident and said the man eventually came back and paid for the damage. It’s unclear what the couple was arguing about.
I think he might be… pic.twitter.com/hMgFHeKuWg
— Collin Rugg (@CollinRugg) April 25, 2025
இந்த சம்பவத்திற்குப் பிறகு, ஹோட்டல் நிர்வாகம் இதை உறுதி செய்துள்ளது. மேலும் இளைஞர் மீண்டும் ஹோட்டலுக்கு திரும்பி, ஜன்னல் உடைப்பு உள்ளிட்ட சேதத்திற்காக நஷ்டஈடு செலுத்தியதாகவும் தெரிவித்துள்ளனர். அந்த இளைஞரின் உடல்நலம் தொடர்பாக எந்த தீவிரக் காயமும் நிகழவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். தற்போது இந்த சம்பவம் குறித்து சமூக ஊடகங்களில் பரவலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. காதல் விவகாரங்களில் கட்டுப்பாடற்ற கோபம் எவ்வளவு ஆபத்தான முடிவுகளை உருவாக்க முடியும் என்பதற்கான எடுத்துக்காட்டு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.