உத்தர பிரதேச மாநிலம் பதேபூர் பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் ஒருவன் அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவருடன் இன்ஸ்டாகிராம் மூலமாக பேசி வந்துள்ளார். இது அந்த பெண்ணின் குடும்பத்தினருக்கு தெரியவந்த நிலையில் தனது வீட்டில் வந்து அவர்கள் பிரச்சினை பண்ண கூடும் என்று சிறுவன் பயந்துள்ளான்.

இதனால் இதைவிட பெரிய பிரச்சனையாக வீட்டிற்கு கொடுக்க வேண்டும் என்று நினைத்த சிறுவன் தன்னை யாரோ கடத்தியது போன்று நாடகமாடியுள்ளான். அதோடு பத்து லட்சம் ரூபாய்க்கு கேட்டு தனது பெற்றோரிடம் மிரட்டவும் செய்துள்ளான்.

இது குறித்து சிறுவனின் தந்தை புகார் அளித்த நிலையில் காவல்துறை அதிகாரிகள் உடனடி விசாரணையை மேற்கொண்டனர். அப்போது சிறுவனின் தொலைபேசி எண் சிக்னலை வைத்து சிறுவனை கண்டுபிடித்த காவல்துறையினருக்கு விசாரணையில் மேற்குறிப்பிட்ட தகவல்கள் தெரிய வந்துள்ளது.

ஒரு பிரச்சனையில் இருந்து தப்பிக்க வேறொரு பெரிய பிரச்சனையை உருவாக்கினால் போதும் என்ற எண்ணம் சிறுவனின் மனதில் தோன்றியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.