ஐபிஎல் 2025 தொடக்கப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டியில், எம்எஸ் தோனி மீண்டும் தனது சிறப்பான டிஆர்எஸ் (DRS) முடிவால் ரசிகர்களை ரசிக்க வைத்துள்ளார். கேப்டன் பதவி இப்போது ருதுராஜ் கெய்க்வாட் வசம் இருந்தாலும், விக்கெட் பின்புலத்தில் தோனியின் பங்களிப்பு , அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கைக்கும் அடையாளமாகவே உள்ளது. 18வது ஓவரில் நாதன் எலிஸ் வீசிய பந்தில் மிச்செல் சாண்ட்னர் LBW ஆப்பில் செய்யும்  சந்தர்ப்பத்தில், தோனியிடம் முறையிடுகிறார். அந்த சமயத்தில்   அமைதியான ‘தனது ‘ சைகை காண்பிக்கிறார்.. இது  சிஎஸ்கே அணிக்கு டிஆர்எஸ் எடுக்க தூண்டியது.

“>

 

உடனடியாக நம்பிக்கை வைக்கிற தோனியின் கண் பார்வையை ருதுராஜ் கெய்க்வாட் நோக்கி திரும்பியதும்   அதனை புரிந்து கொண்ட ருதுராஜ் .. விரைவில் டிஆர்எஸ் எடுக்க முறையிட்டார் நடுவரிடம். ரிப்ளேவில் பந்து ஸ்டம்பின் மேல்பகுதியைத் தாக்குவதை உறுதிப்படுத்தியதோடு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு இன்னொரு முக்கியமான விக்கெட் இழப்பு ஏற்பட்டது. ‘அவுட்’ என்ற தீர்ப்பு திரையில் வந்தவுடன், நாதன் எலிஸ் நேரடியாக தோனியை நோக்கி சென்று கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். இது தோனியின் சரியான கணிப்பை மீண்டும் நிரூபித்து உள்ளது.