
இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. இதில் சில வீடியோக்கள் மிகவும் தனித்துவமாக இருக்கும். சில வீடியோக்களை பார்க்கும்போது எப்படித்தான் இப்படி செய்கிறார்களோ என்று தோன்றும். இப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. அதாவது ஒரு வாலிபர் வித்தியாசமாக மெத்தை போன்ற ஒரு வாகனத்தை சாலையில் ஓட்டி செல்கிறார்.
View this post on Instagram
அந்த வாகனம் பார்ப்பதற்கு பெட்போன்று இருந்தாலும் அது நான்கு சக்கரங்களுடன் உண்மையில் ஒரு கார். இந்த காரை அவர் வாங்கினாரா அல்லது செய்தாரை என்ற விவரம் தெரியவில்லை. அவர் சாலையில் அதில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் மிகவும் வியப்புடன் அதனை பார்த்து செல்வதோடு வீடியோவும் எடுக்கிறார்கள். அப்படி வீடியோ எடுக்கும் போது திடீரென அவர் எழுந்து நின்று ஷாருக்கான் போனறு கைகளை விரித்து போஸ் கொடுக்கிறார். மேலும் இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாக வரும் நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.