
தென்கொரியாவில் 18 வயது முதல் 35 வயதிற்கு உட்பட்ட உடல் தகுதி இருக்கும் ஆண்கள் ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும் என்ற சட்டம் உள்ளது. அவர்கள் குறைந்தது 3 வருடமாவது ராணுவத்தில் சேவை செய்ய வேண்டும். இந்த நிலையில் ராணுவ வேலையில் இருந்து தப்பிப்பதற்காக ஒரு வாலிபர் தனது உடல் தகுதியை குறைக்க திட்டமிட்டு அதிகமாக சாப்பிட்டு உள்ளார். அவருக்கு வயது 26.
உடல் எடை அதிகமாக இருந்தால் ராணுவத்தில் வேலை பார்ப்பதற்கு தகுதி இல்லாமல் போய்விடும் என நினைத்து அவர் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டு உள்ளார். அவரது எடை 112 கிலோ. அவரது பாடி மாஸ் இன்டெக்ஸ் 37.8 வரை அதிகரித்து ஒபிசிட்டி என்னும் உடல் எடை அதிகம் என்பதை நிர்ணயிக்கும் அளவாக இருக்கிறது. ராணுவ சேவையை தவிர்க்க அவர் போட்ட திட்டம் வெளிச்சத்திற்கு வந்தது. அவரை நீதிமன்றத்தில் ஆதார் படுத்தியுள்ளனர். அப்போது மூன்று வருடம் தண்டனை வழங்கலாம் என யோசித்தனர்.
ஆனால் முதல்முறையாக அந்த வாலிபர் குற்றம் புரிந்ததாலும், ராணுவத்திற்கு உண்மையாக சேவை செய்வேன் என கூறியதாலும் இரண்டு ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். தினமும் 2 மடங்கு உணவை அந்த வாலிபர் சாப்பிட உதவியது அவரது நண்பர். அவருக்கு 6 மாத சிறை தண்டனை வழங்கப்பட்டது. விளையாட்டாக இந்த திட்டத்தை சொன்னார். ஆனால் நிஜமாக செய்வார் என நினைக்கவில்லை என பிற நண்பர்கள் வாக்குமூலம் அளித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.