இன்றைய காலகட்டத்தில் சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகி வைரல் ஆகிறது. அதில் சில வீடியோக்கள் ரசிக்க வைப்பதாகவும் சில வீடியோக்கள் கோபத்தை ஏற்படுத்தும் விதமாகவும் சில வீடியோக்கள் உணர்வுபூர்வமாகவும் இருக்கும். அப்படிப்பட்ட ஒரு வீடியோ தான் தற்போது இணையத்தில் வைரல் ஆகிறது. அதாவது போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு பெண் தன்னுடைய தந்தைக்கு குட் பை பார்ட்டி நடத்தியுள்ளார். அதாவது அந்த பெண்ணின் தந்தை புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் எப்போது மரணம் வரும் என்றே தெரியாது.

பொதுவாக ஒருவர் இறந்தால் அவர் இறந்த பிறகு துக்கம் அனுசரிப்பது, அவர்களின் நினைவுகளை மற்றவர்களிடம் பகிர்வது அழுவது என வேதனையில் தவிக்கிறார்கள். இருந்தாலும் மறைந்தவர்கள் திரும்ப வரப்போவது கிடையாது. எனவே அவர்கள் வாழும் போதே அவர்களை சாவை நினைத்து பயப்படாத அளவுக்கு மகிழ்ச்சியுடன் வாழ வைக்க வேண்டும். இதைத்தான் ஒரு மகள் தன் தந்தைக்கு செய்துள்ளார். தன்னுடைய தந்தை இறப்பை நினைத்து கவலைப்படக்கூடாது என்பதற்காக அதனை மகிழ்ச்சியாக பார்ட்டி வைத்து அவர் கொண்டாடியுள்ளார். அந்த குட் பை பார்ட்டியில் அவருடைய தந்தை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறார். மேலும் இந்த வீடியோவை அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் பலரும் தங்கள் கருத்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.