சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் குணசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து சென்னையில் எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு காவல்துறையினர் அனுமதி மறுப்பதால் தடையை மீறி போராட்டம் நடத்துகிறார்கள். இதன் காரணமாக அவர்களை காவல்துறையினர் கைது செய்து  நடவடிக்கை எடுக்கும் நிலையில் இன்று பாமக கட்சியின் சார்பில் சௌமியா தலைமையில் போராட்டம் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்றது.

அப்போது போராட முயன்ற சௌமியா அன்புமணி உட்பட பாமக கட்சியினரை காவல்துறையினர் கைது செய்தனர். இதற்கு கண்டனம் தெரிவித்து இன்று பாமக எம்எல்ஏ அருள் தலைமையில் சேலத்தில் போராட்டம் நடைபெற்றது. அவர் பெண்ணுக்கு நீதி கேட்டு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் ஆனால் அவர்களை கைது செய்வது ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் கருத்து தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டார். மேலும் இதன் காரணமாக அவரை காவல்துறையினர் கைது செய்தனர். தடையை மீறி போராட்டம் நடத்திய எம்எல்ஏ அருள் கைது செய்யப்பட்டது பாமக கட்சியினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.