பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த ஆம் ஆத்மி கட்சியின் எம்எல்ஏ குர்பிரீத் கோகி. இவர் லூதியானா தொகுதியின் எம்எல்ஏ. இவருடைய அறையில் இருந்து இன்று நள்ளிரவு 12:00 மணி அளவில் திடீரென அலறல் சத்தம் கேட்டது. உடனடியாக உள்ளே சென்று பார்த்தபோது அவர் துப்பாக்கி குண்டு காயங்களுடன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தார்.

உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில், செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டார். இந்நிலையில் அவரை மர்ம நபர்கள் சிலர் சுட்டுக்கொலை செய்திருக்கலாம் என்று கூறப்பட்ட நிலையில் தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் துப்பாக்கியை சரி செய்யும் போது தவறுதலாக குண்டு பாய்ந்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிரேத பரிசோதனை அறிக்கை வெளிவந்த பிறகு தான் உண்மை காரணம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ள நிலையில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.