திமுக கட்சியின் அரக்கோணம் தொகுதி எம்பி ஜெகத்ரட்சகன். இவர் மீது தற்போது அந்நிய செலவாண்மை மேலாண்மை சட்டத்தின் கீழ் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. அதாவது இந்திய ரிசர்வ் வங்கியின் ஒப்புதலை பெறாமல் சிங்கப்பூரில் உள்ள நிறுவனங்களில் பங்குகளை வாங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த குற்றச்சாட்டுகள் தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வரும் நிலையில் தற்போது ஜெகத்ரட்சகன் மற்றும் அவருடைய குடும்பத்தாருக்கு ரூ.908 கோடி அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அதோடு அவருக்கு சொந்தமான ரூ.88.19 கோடி மதிப்பிலான சொத்துக்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஆளும் கட்சி எம்பிக்கு அபராதம் விதிக்கப்பட்ட சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டது தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.