
அமெரிக்க நாட்டை சேர்ந்த பெவர்லி ஜான்சன் தன் 70 வயதிலும் உலகின் முன்னணி மாடலாகவும், நடிகையாகவும், தொழில் அதிபாராகவும் வலம் வருகிறார். இவர் புகழ்பெற்ற Vogue இதழின் அட்டைப் படத்தின் கவர் மாடல் ஆக தோன்றினார். மேலும் திரைப்படங்கள், ரியாலிட்டி ஷோ, மாடலிங் மற்றும் பொழுதுபோக்கு என கலக்கி வந்த ஜான்சன் அண்மையில் தன் 70வது பிறந்தநாளை கொண்டாடினார்.
70 வயதிலும் முதுமை தெரியாத அடிப்படையில் இளமை மாறாமல் பொலிவுடன் உள்ளார் ஜான்சன். இவருக்கு 2 முறை திருமணமாகி விவகாரத்து ஆகியுள்ளது. அதன்பின் கிறிஸ் நார்த் என்ற நடிகருடன் உறவில் இருந்தார். தற்போது ஜான்சனுக்கு 1 மகளும், 4 பேரக் குழந்தைகளும் இருக்கின்றனர்.