
நடிகர் பிரித்திவிராஜ் எம்புரான் படத்தை இயக்கினார். இந்த படம் பல விமர்சனங்களை சந்தித்தது. கடந்த 2019-ஆம் ஆண்டு லூசிபர் என்ற திரைப்படம் மோகன்லால் நடிப்பில் ரிலீசானது. இந்த படத்தின் இரண்டாவது பாகமாக எம்பிரான் திரைப்படம் கடந்த 27-ஆம் தேதி திரையரங்குகளில் ரிலீசானது.
இந்த படத்தை லைகா ப்ரொடக்ஷன், கோகுலம் மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளது. படத்தில் இருந்து சில காட்சிகள் சர்ச்சை ஏற்பட்டதால் நீக்கப்பட்டது. நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் தயாரிப்பு நிறுவனத்தின் அதிபர் கோபாலகிருஷ்ணன் தொடர்புடைய இடங்களில் சோதனை நடத்தினர்.
இன்று வருமான வரி துறையினர் பிரித்திவிராஜுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். பிரிதிவிராஜ் எம்புரான் திரைப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் உள்ளார். இதற்காக பிரித்திவிராஜ் 40 கோடி ரூபாய் பெற்றதாக தகவல் வெளியாகி உள்ளது.
கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பணம் தரப்பட்டது பற்றியும், கடுவா, ஜனகணமன, கோல்ட் ஆகிய படங்களின் ஊதியம் குறித்தும் அவரிடம் விளக்கம் கேட்டு வருமானவரித்துறையினர் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.