
மும்பையில் உள்ள அடல் பிகாரி வாஜ்பாய் ட்ரான்ஸ் ஹார்பர் பாலத்தில் இருந்து கடலில் விழ முயன்ற 57 வயது பெண்ணை டாக்சி ஓட்டுநர் மற்றும் போலீசார் சேர்ந்து காப்பாற்றியுள்ளனர்.
இந்த சம்பவம் சிசிடிவி கேமராவில் பதிவாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பாலத்தின் பாதுகாப்பு வேலியில் அந்த பெண் அமர்ந்து கொண்டு கடலில் ஏதோ ஒன்றை வீசிவிட்டு குதிக்க முயற்சித்துள்ளார்.
அப்போது வந்த டாக்சி ஓட்டுநர் அவரை பிடித்து இழுத்துள்ளார். அதன் பின்னர் போலீசார் வந்து அவரை காப்பாற்றியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அந்த பெண்ணை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர். அவரது குடும்பத்தினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.