
கர்நாடக இசையில் புகழ்பெற்று விளங்கிய பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமி. இசைத்துறையில் முதல் முறையாக பாரத ரத்னா விருது பெற்ற பாடகி என்ற பெருமையும் இவரையே சேரும். அதன்பிறகு எம்.எஸ் சுப்புலட்சுமி தன்னுடைய 10 வயதிலிருந்து பாடிவரும் நிலையில் சில படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில் எம்.எஸ் சுப்புலட்சுமியின் வாழ்க்கை வரலாறு திரைப்படம் உருவாக இருக்கிறது.
இந்தத் திரைப்படத்தில் நடிக்க நடிகைகள் திரிஷா மற்றும் நயன்தாராவிடம் பேச்சு வார்த்தைகள் நடைபெற்று வருகிறது. இறுதி கட்ட பேச்சு வார்த்தைகள் முடிந்த பிறகு திரிஷாவா அல்லது நயன்தாராவா என்பது முடிவு எடுக்கப்படும். மேலும் எம்.எஸ். சுப்புலட்சுமி பயோபிக்கில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிக அளவில் இருக்கிறது.