எய்ட்ஸ் நோய்க்கான சிகிச்சை முறையில் மற்றொரு படி முன்னேறியுள்ளது. அதன்படி ஜெர்மனியைச் சேர்ந்த 60 வயது முதியவர் ஒருவர் இந்த தொற்று நோயில் இருந்து முழுமையாக குணமடைந்துள்ளார். நாற்பது ஆண்டுகால எய்ட்ஸ் வரலாற்றில் முழுமையாக குணமடைந்த ஏழாவது நபர் இந்த முதியவர் தான்.

பாதிக்கப்பட்டவருக்கு ஸ்டெம் செல் சிகிச்சை வெற்றிகரமாக முடிந்ததாக மருத்துவர்கள் கடந்த வியாழக்கிழமையன்று அறிவித்தனர். அவர் 2015 ஆம் வருடம் ஆபத்தான மற்றும் வலிமிகுந்த ஸ்டெம் செல் மாற்று அறுவை சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.