
மலையாள திரையுலகில் நடிகைகளுக்கு பாலியல் தொல்லைகள் நடப்பதாக ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த அறிக்கை வெளியானதில் இருந்து பிரபலங்கள் மீது நடிகைகள் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் நடிகை ரேவதி பாலியல் புகார் தொடர்பாக நடிகர் மம்மூட்டி மற்றும் நடிகர் மோகன்லால் ஆகிய மூத்த நடிகர்கள் கருத்து சொல்லாமல் இருப்பது குறித்து பேசி உள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது, இந்த பிரச்சனைகளை தற்போது மக்கள் தீவிரமாக எடுத்துக் கொண்டார்கள். மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டார்களான மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோர் இது தொடர்பாக கருத்து தெரிவிக்காமல் மௌனம் காப்பது எங்களைப் போன்ற அவர்களும் அதிர்ச்சி அடைந்தது தான். அதனால் தான் இந்த விவகாரத்தில் அவர்கள் கருத்து சொல்லாமல் இருக்கிறார்கள். மேலும் நாங்கள் பேசுகிறோம் அவர்கள் அமைதியாக இருக்கிறார்கள் என்று கூறியுள்ளார்.