தஞ்சாவூரில் வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்துதல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சி நடைபெற்றது. இதில் தமிழக வேளாண் துறையின் அமைச்சரான எம் ஆர் கே பன்னீர்செல்வம் பங்கேற்றார். இந்நிலையில் மாநாட்டில் மைக் முன்பு எம் ஆர் கே பன்னீர்செல்வம் பேச வந்த போது பேசுவதற்கு தேவையான குறிப்புகளை காணாமல் தனது உதவியாளரை அழைத்துள்ளார்.

உதவியாளர் பரசுராமன் அங்கு வந்ததும் “எருமை மாடா டா நீ” என தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். இது தொடர்பான காணொளி சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலான நிலையில் அமைச்சர் வருத்தம் தெரிவிப்பாரா என்று நெட்டிசன்கள் எதிர்பார்க்கின்றனர்.