தஞ்சாவூரில் நடைபெற்ற வேளாண்மை மற்றும் உணவு பதப்படுத்தல் வளர்ச்சி மாநாடு மற்றும் கண்காட்சியில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். அவர் மேடையில் மைக் முன்பு பேச ஆரம்பித்தார். அப்போது தான் பேசுவதற்கான குறிப்பு அங்கு இல்லாததால் அமைச்சர் கோபமானார். உடனே தனது உதவியாளரான பரசுராமன் எங்கே என கேட்டார்.

அவர் குறிப்புடன் ஓடி வந்ததும் எருமை மாடா நீ என தகாத வார்த்தையால் உதவியாளரை திட்டியதோடு அவர் கொடுத்த பேப்பரையும் மேடையிலேயே தூக்கி வீசினார். அமைச்சரின் இந்த செயல் மேடையில் கூடியிருந்த அவர்களை அதிர்ச்சி அடைய செய்தது. அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் அந்த பேச்சு தொடர்பான வீடியோ சோசியல் மீடியாவில் வேகமாக பரவி வருகிறது. நெட்டிசன்கள் அமைச்சர் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிப்பாரா? என கேள்வி எழுப்பி வருகின்றனர்.