
இன்றைய காலகட்டத்தில் ஒவ்வொருவருடைய வாழ்விலும் சேமிப்பு என்பது இன்றியமையாத ஒன்றாக மாறியுள்ளது. வயதான காலத்தில் யாருடைய உதவியும் இல்லாமல் வாழ்வதற்கு தற்போதையிலிருந்து பலரும் சேமிக்கின்றனர். அதே சமயம் எதிர்காலத்தில் தங்களுடைய குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்திலும் பெற்றோர்கள் பிறந்த குழந்தைக்கு கூட இன்று சேமிக்க தொடங்கிவிட்டனர். இதனால் மக்களின் வசதிக்கு ஏற்றது போல தபால் நிலையங்கள் மற்றும் வங்கிகளில் ஏராளமான சேமிப்பு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளது. மக்களின் சேமிப்பு பழக்கத்தை ஊக்குவிக்க பல்வேறு சேமிப்பு திட்டங்கள் அமலில் உள்ளன.
அதன்படி இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் எல்ஐசி ஆனது பல்வேறு பாலிசி திட்டங்களை வழங்கி வருகின்றது. அதன்படி தற்போது புதிய ஓய்வூதிய திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. இந்த ஸ்மார்ட் ஓய்வூதிய திட்ட பாலிசியை குறைந்தபட்சம் ஒரு லட்சம் ரூபாய் செலுத்தி வாங்கிக் கொள்ளலாம். அதிக தொகைக்கு வாங்கினால் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கொடுப்பனவு முறைகள், ஆண்டு, அரையாண்டு, காலாண்டு அல்லது மாதாந்திரம் என உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்றது போல பெற்றுக் கொள்ளும் வசதியும் இந்த திட்டத்தில் உள்ளது. இதில் சந்தாதாரர்கள் ஐந்து ஆண்டுகளுக்கு பின்னர் முதலீடு செய்த தொகையில் 60 சதவீதம் வரை திரும்ப பெற்றுக் கொள்ளலாம். பாலிசி எடுத்த மூன்று மாதங்களுக்கு பின்னால் சந்தாதாரர்கள் அதன் மூலமாக கடன் பெறும் வசதியும் இதில் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது