பள்ளிக்கல்வித்துறை சார்பாக நடைபெறும் ஐம்பெரும் விழாவில் முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்டுள்ளார். இந்த விழாவில் பேசிய முதல்வர், மாணவிகள் போல மாணவர்களுக்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் செயல்படுத்தப்படும் என தெரிவித்தார்.

மேலும் எவ்வளவு நிதி நெருக்கடி இருந்தாலும் உங்களுக்காக தான் பல புதிய திட்டங்களை ஆரம்பித்து வருகிறோம். மத்த எல்லாத்தையும் நான் பார்த்துக்கிறேன், பதிலுக்கு நீங்கள் படிங்க படிங்க படிச்சுக்கிட்டே இருங்க என்று கூறினார். இதற்கு முன்னதாக பேசிய அன்பில்  மகேஷ், பள்ளி மாணவ மாணவியரை தன் குழந்தைகள் போல பார்ப்பவர் நமது முதலமைச்சர் என்று நெகிழ்ந்து பேசியது குறிப்பிடத்தக்கது.