
மலையாள சினிமாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் பல நடிகர்கள் பாலியல் புகார்களில் சிக்கி வருகிறார்கள். அதன்பிறகு இந்த அறிக்கை வெளியானதில் இருந்து நடிகைகள் பலரும் தங்களுக்கு நேர்ந்த துயரங்கள் குறித்து வெளிப்படையாக கூற ஆரம்பித்து விட்டார்கள். அந்த வகையில் நேற்றைய பிரபல மலையாள நடிகர் நிவின்பாலி மீது பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததாகவும் இதனால் காவல்துறையினர் அவர் மீது வழக்கு பதிவு செய்ததாகவும் செய்திகள் வெளியானது.
இது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் நடிகர் நிவின் பாலி அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் நான் ஒரு பெண்ணை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வெளியான குற்றச்சாட்டுகள் அனைத்தும் போலியானவை. இந்த செய்தி முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என்பதை அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும். இந்த குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்பதை நிரூபிக்க நான் எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கிறேன். இதற்கு பொறுப்பானவர்களை வெளிச்சத்திற்கு கொண்டுவர தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன். மேலும் சட்டப்படி அனைத்தும் கையாளப்படும் என்று கூறியுள்ளார்.