
தமிழக வெற்றி கழகத்தின் மாநாடு சிறப்பாக நடைபெற்று முடிந்தது. மாநாட்டில் விஜய் அவர்கள் பேசியதில் அவர் பலரையும் நேரடியாக சுட்டிக்காட்டி பேசியுள்ளார். அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி உள்ளார். கழக எதிரி யார் என்பதை அவர் தெளிவாக கூறியுள்ளார். இந்நிலையில் அவரது தொண்டர்கள் அவர் பேசிய 48 நிமிட வீடியோவை கட் செய்து யார் யாருக்கு எதிராக அவர் பேசியுள்ளார் என்பது குறித்து விளக்கமாக சமூக வலைதளங்களில் வீடியோக்களை பதிவிட்டு வருகின்றனர். அதில், ஒரு பகுதியில் ரஜினிகாந்த் அவர்களுக்கு எதிராக பேசியதாக ஒரு வீடியோ ஒன்று வைரல் ஆக்கப்பட்டு வருகிறது.
அதில் நமக்கு இவ்வளவு நன்மைகள் செய்த இந்த மக்களுக்கு எதுவும் செய்யாமல் இருப்பது நல்ல விசுவாசமாக இருக்குமா? ஒரு கட்டத்திற்கு மேல் அதிகமாக பணம் சம்பாதித்து என்ன செய்யப் போகிறோம்? நம்மை வாழவைத்த இந்த மக்களுக்காக என்ன செய்யப் போகிறோம்? என பேசி இருப்பார். இது ரஜினி அவர்களை நேரடியாக சாடியிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது ரஜினி அவர்கள் குறிப்பிட்ட வயதுக்கு மேல் தொடர்ந்து படங்கள் நடித்துக் கொண்டே வருகிறார்.
தொடர்ந்து பணம் சம்பாதித்துக் கொண்டே வருகிறார். விஜய் அவர்கள் அரசியல் வருகை குறித்த பேச்சுக்கள் தொடங்குவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பிருந்தே ரஜினி அவர்கள் அரசியலுக்கு வருவார் என்ற பேச்சு எழுந்து வந்தது. ஆனால் அவர் நேரடியாக களத்தில் இறங்காமல் தொடர்ச்சியாக பேசி மட்டுமே வந்து இன்னும் படம் மட்டுமே நடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் அரசியலுக்கு வருவது போல் தெரியவில்லை. ஆனால் விஜய் அவர்கள் அப்படி இல்லாமல் ஒரு கட்டத்திற்கு மேல் சம்பாதித்தது போதும் தன்னை இவ்வளவு தூரம் வாழ வைத்த மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் அரசியலுக்கு வந்திருப்பதாக அவருடைய ரசிகர்கள் இதுகுறித்து கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Direct Attack to Mentalan @rajinikanth 😂#TvkVijayMaanadu pic.twitter.com/0qzKJaurVQ
— Pokkiri Victor (@Mangathadaw123) October 27, 2024