
விஜயின் தமிழக வெற்றி கழகம் கட்சியின் முதல் மாநாடு வருகிற 27-ஆம் தேதி விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளது. தமிழக வெற்றி கழகத்தின் தொண்டர்கள் மாநாட்டுக்கான ஏற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில் கடலூர் எஸ்.பி ராஜாராம், விழுப்புரம் உதவி கண்காணிப்பாளர் ரவிந்திரகுமார் குப்தா ஆகியோர் மாநாட்டு திடலில் அதிரடியாக ஆய்வு மேற்கொண்டனர். மாநாட்டுக்கு வரும் தொண்டர்களுக்கு பொது அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளதா என்பதை ஆய்வு செய்துள்ளனர். விக்ரவாண்டி காவல் துணை கண்காணிப்பாளர் நந்தகுமார் உள்ளிட்டோரும் ஆய்வில் பங்கேற்றனர் .