
தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர் மகேஷ் பாபு. இவர் நடிப்பில் தற்போது ராஜமவுலி இயக்கத்தில் எஸ்எஸ்எம்பி 29 என்ற படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படமானது மிகப்பெரிய பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த படத்தில் மகேஷ்பாபுவிற்கு ஜோடியாக பிரியங்கா சோப்ரா நடிக்கிறார். மேலும் பிருத்திவிராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாக இருக்கிறார்.
இந்த படத்தின் படப்பிடிப்பானது தற்போது ஓடிசாவில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் படத்தின் தொடர்பான காட்சிகள் இணையத்தில் லீக் ஆகி வைரலாகி வருகிறது. படத்தில் மகேஷ்பாபு நடிக்கும் காட்சிகள் இணையத்தில்வெளியானதால் படக்குழுவானது அதிர்ச்சி அடைந்துள்ளது.