ரஷ்யா உக்ரைன் இடையேயான போர் சுமார் இரண்டு வருடங்களை தாண்டி நீடித்து வருகிறது. ரஷ்யா தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ள நிலையில் மேற்கத்திய நாடுகளின் உதவியுடன் உக்ரைன் எதிர்கொண்டு போரிட்டு வருகிறது. இந்நிலையில் ரஷ்ய எல்லைக்குள் புகுந்து தாக்குதல் மேற்கொள்ள முற்பட்ட உக்கரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக ரஷ்ய இராணுவம் தெரிவித்துள்ளது.

இது குறித்து ரஷ்ய பாதுகாப்பு துறை அமைச்சகம் வெளியிட்ட செய்தியில் உக்ரைன் நேற்றிரவு ரஷ்யாவுக்குள் ட்ரோன்கள் மூலமாக தாக்குதல் நடத்த முயற்சித்தது. ஆனால் ரஷ்யாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் மூலம் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டு 84 உக்ரைன் ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன என தெரிவித்துள்ளது.