
பேரவையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் கூறியதாவது, எல்லோருக்கும் எல்லாம் என பரந்த மனதோடு திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு வேலை வாய்ப்பு முகாம் அமைக்கப்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளுக்கு மாதாந்திர ஊக்கத்தொகை வழங்கப்பட்டு வருகிறது.
493 மாற்றுத்திறனாளிகள் கடந்த நான்கு ஆண்டுகளில் அரசு பணி பெற்றுள்ளனர். மாற்றுத்திறனாளிகளின் குரல் உள்ளாட்சி அமைப்புகளில் ஒலிக்க வேண்டும். 12 ஆயிரம் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் திட்டத்தால் உள்ளாட்சிகளில் வாய்ப்பு கிடைக்க உள்ளது என கூறியுள்ளார்.