பப்ஜி காதலனை சந்திக்க சட்டத்திற்கு விரோதமாக பாகிஸ்தானில் இருந்து இந்தியாவிற்குள் நுழைந்தவர் சீமா ஹைதர். இவர் இந்து மதத்திற்கு மாறியதோடு தான் பாகிஸ்தானுக்கு திரும்ப போவதில்லை என்று உறுதியாக கூறிவிட்டார். மேலும் இந்திய குடியுரிமை தனக்கு வழங்க வேண்டும் என்றும் கேட்டுள்ளார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த அவர் தன்னை பற்றி அனைவரும் தவறாகவே பேசுவதாகவும் ஒருமுறை கூட தன்னை பற்றி யாரும் நல்லவிதமாக பேசவில்லை என்றும் தனது வருத்தத்தை தெரிவித்ததோடு தனக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்ட பின்பு தான் நல்லவர் என்பதை அனைவருக்கும் நிரூபிப்பேன் என்று கூறியுள்ளார்.