
கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம் பெண் ஒருவர் கல்லூரியில் படித்து வருகிறார். இவர் ஸ்கூட்டியில் குனியமுத்தூர் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது சாலை குண்டும் குழியுமாக இருந்தது. அப்போது திடீரென நிலை தடுமாறிய ஸ்கூட்டி எதிரே வந்த மற்றொரு வாலிபர் ஓட்டி வந்த பைக் மீது மோதியது. இதனால அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து அந்த வாலிபரிடம் சிரித்தபடியே மன்னித்து விடுங்கள் என்று கூறியதாக கூறப்படுகிறது. இதனால் அந்த வாலிபர் அந்த மாணவியை பின்தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் ஸ்கூட்டியை தடுத்து நிறுத்திய அவர் சிறிது நேரம் அந்த இளம் பெண்ணிடம் பேசிக் கொண்டிருந்தார். பின்னர் அந்த பெண்ணை பிடித்து முகம் மற்றும் கழுத்தில் முத்தம் கொடுத்துவிட்டார்.
இதனால் அந்த மாணவி அதிர்ச்சி அடைந்து சத்தம் போட்ட நிலையில் அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் அந்த வாலிபர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் அந்த பெண் புகார் கொடுத்த நிலையில் அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் அவருடைய பெயர் முகமது செரீப் என்பது தெரிய வந்தது. அவருக்கு திருமணம் ஆகி ஒரு மகன் இருப்பதும் தெரிய வந்த நிலையில் அவரிடம் நடத்திய விசாரணையில் மாணவி சிரித்தபடி பேசியதால் அதனை வாலிபர் தவறாக எடுத்துக் கொண்டு பின் தொடர்ந்து சென்ற முத்தம் கொடுத்தது தெரிய வந்தது. மேலும் அந்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்துள்ளனர்.