நாடு  முழுவதும் தற்போது மக்கள் மத்தியில் ஆன்லைன் பரிவர்த்தனைகள் மற்றும் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் அதிகரித்துவிட்டது. இதனிடையே நாட்டின் மிகப்பெரிய வங்கியான sbi வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு பலவிதமான டிஜிட்டல் வங்கி சேவைகளை வழங்கி வருகின்றது. அதன்படி எஸ்பிஐ நெட் பேங்கிங் மூலம் வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.இந்த  நிலையில் sbi வாடிக்கையாளர்கள் ஆன்லைன் நெட் பேங்கிங் வசதியை எப்படி செயல்படுத்துவது என்பது குறித்து எளிமையான முறையில் இதில் தெரிந்து கொள்ளலாம்.

அதற்கு முதலில் எஸ்பிஐ நெட் பேங்கிங் இணையதளமான என்ற பக்கத்திற்கு செல்ல வேண்டும். அதில் தனிப்பட்ட வங்கி பிரிவை நீங்கள் திறந்து இருக்க வேண்டும். உள் நுழைவதற்கு தொடரவும் என்பதை தேர்ந்தெடுத்து எஸ்பிஐயின் இணைய வங்கியை பயன்படுத்துவதற்கான சேவை விதிமுறைகளை ஒப்புக்கொள்ள முடியும்.. புதிய பயனர் பதிவு என்பதை கிளிக் செய்து புதிய பயனர் பதிவு மற்றும் செயல்படுத்துவது என்ற விருப்பத்தில் பதிவு பக்கத்திற்கு செல்ல இதை கிளிக் செய்ய வேண்டும்.

உங்கள் விவரங்களை உள்ளிட்ட பிறகு ஓடிபி உருவாக்கும்படி சொல்லும். அந்த ஓடிபி உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு அனுப்பப்பட்டதும் அதனை உள்ளிட்டு சமர்ப்பி என்பதை கிளிக் செய்ய வேண்டும். ஏடிஎம் கார்டு மூலம் பதிவு செய்ய வேண்டும். எஸ்பிஐ நெட் பேங்கிங் ஆன்லைன் பதிவு ஏடிஎம் கார்டு மூலம் மட்டுமே சாத்தியமாகும். இல்லையென்றால் வங்கி கிளைக்கு செல்ல வேண்டும். பிறகு சமர்ப்பி என்பதை கிளிக் செய்தால் தற்காலிக பயனர் பெயர் திரையில் தோன்றும். ஓடிபி உள்ளிட்ட பிறகு எஸ்பிஐ நெட் பேங்கிங் உள்நுழைவு கடவுச்சொல்லை உருவாக்க வேண்டும்.

பின்னர் உள்நுழைவு பக்கத்திற்கு சென்றவுடன் sbi நெட் பேங்கிங் கணக்கில் உள்நுழைய உங்களின் பயனர் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். இதனைத் தொடர்ந்து உங்களின் கணக்கில் உள் நுழைந்த பிறகு பதிவு செயல்முறையை முடிக்கும்படி கேட்கப்படும். இதனை முடிக்க உங்களின் மின்னஞ்சல் முகவரி மற்றும் பாதுகாப்பு கேள்விகள் போன்ற கூடுதல் தகவல்களை பதிவு செய்ய வேண்டும்.. பிறகு உங்கள் எஸ்பிஐ நெட் பேங்கிங் கணக்கு செயல்படுத்தப்படும்.. ஆன்லைனில் பல்வேறு வங்கி பரிவர்த்தனைகளை செய்வதற்கு தற்போது நீங்கள் இந்த கணக்கை பயன்படுத்தலாம்.