கர்நாடக மாநிலத்தின் முன்னாள் முதல்வர் எஸ்.எம் கிருஷ்ணா. இவருக்கு 92 வயது ஆகவும் நிலையில் வயது மூப்பு மற்றும் உடல் நலக்குறைவின் காரணமாக காலமானார். இவர் கடந்த 1998 ஆம் ஆண்டு முதல் 2004 ஆம் ஆண்டு வரை கர்நாடக மாநிலத்தின் முதல்வராக இருந்தவர். அதன் பிறகு கடந்த 2004 முதல் 2008 வரை மகாராஷ்டிரா மாநிலத்தின் ஆளுநராகவும் பதவி வகித்துள்ளார். கடந்த 2009 முதல் 2012 வரை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். இவருடைய மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வரும் நிலையில் முதல்வர் ஸ்டாலின் மற்றும் பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்டோரும்‌ இரங்கல் தெரிவித்துள்ளனர்.

அதன்படி பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கள் பதிவில், எஸ்.எம் கிருஷ்ணா அனைத்து தரப்பு மக்களாலும் போற்றப்பட்ட ஒரு தலைவர். குறிப்பாக உள்கட்டமைப்பை மேம்படுத்துவதில் சிறப்பு கவனம் செலுத்தினார். அவர் ஒரு சிறந்த வாசகர் மற்றும் சிந்தனையாளர். பல வருடங்களாக எஸ்.எம் கிருஷ்ணாவுடன் தொடர்பு கொண்டு உரையாட எனக்கு பல வாய்ப்புகள் கிடைத்துள்ள நிலையில் அந்த நினைவுகளை நான் எப்போதும் மறக்க மாட்டேன். அவருடைய மரண செய்தியை கேட்டு நான் மிகுந்த வருத்தமடைந்தேன். அவருடைய குடும்பத்தினருக்கும் அவரை பின்தொடர்பவர்களுக்கும் அனுதாபங்கள் ஓம் சாந்தி என்று பதிவிட்டுள்ளார். மேலும் இதே போன்று முதல்வர் ஸ்டாலினும் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் இரங்கல் தெரிவித்துள்ளார்.