
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கரும்பாட்டூர் பகுதியில் செல்வம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பிரபல ரவுடி. இவர் மீது காவல் நிலையத்தில் பல்வேறு வழக்குகள் பதிவாகியுள்ளது. இவர் மீது 6 கொலை வழக்குகள் உட்பட 28 வழக்குகள் நிலுவையில் இருக்கிறது. இவர் பல்வேறு வழக்குகளில் ஆஜராகாததால் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்த நிலையில் அவரை காவல்துறையினர் வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் செல்வம் சுசீந்திரம் அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி காவல் துறையினர் இன்று அங்கு சென்றனர். அவரை காவல்துறையினர் மடக்கி பிடித்த நிலையில் உதவி ஆய்வாளரை அரிவாளால் வெட்டிவிட்டு தப்பி ஓட முயன்றார். இதனால் தற்காப்புக்காக காவல்துறையினர் செல்வத்தின் காலில் சுட்டனர். இதைத்தொடர்ந்து அவரை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்த நிலையில் காவல்துறையினர் கைது செய்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் குமரியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.