நாடகமோடு கலந்த நையாண்டி மூலம் அரசியல் சச்சரவுகளை வெளிப்படுத்திய காமெடியன் குனால் காம்ராவை நடிகர் பிரகாஷ் ராஜ் ஆதரித்துள்ளார். மும்பையில் நடைபெற்ற காமெடி நிகழ்ச்சியில் மகாராஷ்டிராவின் துணை முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவை “துரோகி என குறிப்பிட்டதாகக் கூறி, மும்பை போலீசார் குனாலுக்கு சம்மன் அனுப்பியுள்ளனர். இதைத் தொடர்ந்து, குனாலை ஆதரித்து, “அரசியலிலும் கலை வடிவங்களிலும் எதிர்ப்பை பதிவு செய்யும் கலைஞர்கள் வரலாற்றால் மறக்க முடியாது. குனால் காம்ரா மிகவும் துணிச்சலுடன் உண்மையை நையாண்டி வழியாகச் சொல்லியிருக்கிறார். இது சாதாரண நகைச்சுவை இல்லை, இது சாப்பிளின் நகைச்சுவையைப் போன்று சமூக சிந்தனையுடன் கூடியது” என பிரகாஷ் ராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், குனால் அரசாங்க அமைப்புகளை குற்றவாளிகளுடன் ஒப்பிடுவது முறையா என்ற கேள்விக்கு பதிலளிக்கும்போது, “அவர் ஒப்பிடவில்லை. நடக்கும் உண்மைகளைப் பேசுகிறார். ஸ்டேன் ஸ்வாமிக்கு ஸ்ட்ரா கூட தரப்படவில்லை, ஆனால் ஆசாராம் பாபுவுக்கு ஜாமீன் கிடைக்கிறது. உமர் காளித் சிறையில் இருக்கிறார், ஆனால் அடிதடி அடைக்கும் சிலர் அடுத்த நாளே ஜாமீனில் வெளியே வருகிறார்கள். இவை பற்றி பேசுவதற்காக குனால் ஒரு விவாதத்தை தொடங்கியுள்ளார். அவரைப் போல பேசுபவர்களை கட்டுப்படுத்த முயற்சிக்கின்றோம்; அதுதான் பிரச்சனை” என தெரிவித்தார். குனால் தற்போது தமிழகத்தில் இருக்கிறார், அவருக்கு சென்னை உய்ரநீதிமன்றம் முன் ஜாமீன் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.