
பெரும்பாலும் மக்கள் நீண்ட தூர பயணத்திற்கு ரயில் பயணத்தை தேர்வு செய்து வருகிறார்கள். ஒரு காலத்தில் ரயிலில் பயணம் செய்பவர்கள், பஸ்ஸில் பயணம் செய்பவர்களாக இருந்தாலும் சரி அவர்கள் அதில் எந்த ஒரு அசௌகரியம் ஏற்பட்டாலும் அதை பொறுத்துக் கொள்வார்கள். ஆனால் இப்பொழுது அப்படி கிடையாது நாம் பணம் கொடுத்து பேறும் சேவையில் ஏதேனும் அசௌகரியும் ஏற்பட்டால் உடனே அதை மக்கள் கேள்வி கேட்க தொடங்கி விட்டார்கள். அந்த வகையில் செங்கோட்டையிலிருந்து சென்னை தாம்பரத்திற்கு எக்ஸ்பிரஸ் ரயில் ஒன்று நேற்று புறப்பட்டு வந்துள்ளது.
அந்த ரயிலில் உள்ள ஏசி பெட்டிகளில் ஏசி சுத்தமாக வேலை செய்யவில்லை. ஜன்னல் அனைத்தும் அடைக்கப்பட்ட நிலையில் பயணிகளுக்கு வியர்த்து கொட்டியுள்ளது. இதனால் எரிச்சல் அடைந்த பயணிகள் அங்கிருந்த டிக்கெட் பரிசோதகரிடம் புகார் அளித்தனர். ஆனால் அவர் சிறிது நேரத்தில் சரியாகிவிடும் என்று கூறி சென்றுள்ளார். ஆனால் அப்படியும் ஏசி வேலை செய்யாததால் அந்த பயணிகள் அபாய சங்கிலியை பிடித்து இழுத்து ரயிலை நிறுத்தினார்கள்.
இதனையடுத்து அங்கு வந்த அதிகாரியிடம் பயணிகள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனைய டுத்து திருவாரூர் ரயில் நிலையம் முன்பு ஏசி சரி செய்கிறோம் என்று அதிகாரிகள் உறுதி அளித்ததால் பயணிகள் ரயிலில் ஏறி அமர்ந்தார்கள். அதன் பிறகு ஏசி சரி செய்து கொடுக்கப்பட்டது., ஏசி வராததால் பயணிகள் ரயிலை நிறுத்திய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.