நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட நிலையில் ஏஞ்சல் வரியை ரத்து செய்து நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உத்தரவிட்டார். இந்த உத்தரவு வரவேற்பை பெற்றுள்ள நிலையில் தற்போது ஏஞ்சல் வரி என்றால் என்ன என்பது குறித்து பார்ப்போம். அதாவது, ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் என்று அழைக்கப்படும் புத்தாக்க நிறுவனங்களுக்கு தான் அந்த வரி விதிக்கப்படுகிறது. இந்த நிறுவனங்கள் சந்தை மதிப்பை விட கூடுதலாக முதலீடுகளை ஈர்த்தால் அதற்கு ஏஞ்சல் வரி செலுத்த வேண்டும்.

இந்நிலையில் பங்கு விற்பனை மூலம் முதலீட்டாளர்களிடமிருந்து பெறப்படும் தொகையானது நியாயமான விலையை விட அதிகமாக இருந்தால் அந்த அதிகப்படியான தொகைக்கு மட்டும் வரி செலுத்த வேண்டும். இதுதான் ஏஞ்சல் வரி. இந்த வரி கடந்த 2012 ஆம் ஆண்டிலிருந்து நடைமுறையில் இருந்த நிலையில் தற்போது அதனை முழுமையாக ரத்து செய்வதாக மத்திய அரசு பட்ஜெட்டில் அறிவித்துள்ளது. மேலும் இது ஸ்டார்ட் அப் நிறுவனங்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.