தூத்துக்குடி மாவட்டத்தில் தெற்கு சம்பந்தமூர்த்தி தெரு உள்ளது. இங்கு ஒரு வங்கியின் ஏடிஎம் மையம் உள்ளது. இந்த மையத்தில் நேற்று சில மர்ம நபர்கள் கொள்ளையடிப்பதற்காக சென்றுள்ளனர். அப்போது அங்கு வைக்கப்பட்டிருந்த அலாரம் அடித்த நிலையில், மாவட்ட காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின் படி அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினரை ஏடிஎம் மையத்திற்கு செல்லுமாறு கூறினர்.

அதன்படி போலீஸ்காரர் முன்னா உள்பட 3 பேர் அங்கு சென்றனர். அவர்கள் மர்ம நபர்களை பிடிக்க முயன்ற  போது முன்னாவை ஒருவர் கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயம் அடைந்த முன்னா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் கத்தியால் குத்தியது செந்தில்குமார் என்பது தெரிய வந்தது. இவர் புதியம்புத்தூர் பகுதியைச் சேர்ந்தவர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.