இன்றைய காலகட்டத்தில் மக்கள் மத்தியில் ஆன்லைன் பணப்பரிவர்த்தனை என்பது அதிகரித்து விட்டது. வங்கிக்குச் சென்று பணம் எடுக்கும் காலம் போய் தற்போது மக்கள் ஏடிஎம் மூலமாக பணம் எடுத்து விடுகின்றனர். அப்படியே ஏடிஎம்மில் பணம் எடுக்கும் போது எதிர்பாராத விதமாக கிழிந்த நோட்டுகள் வருகின்றது. இதனால் பலரும் வேதனை அடைகின்றனர்.

ஆனால் 2017 ஆம் ஆண்டு ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கையின் படி அந்த நோட்டுக்களை வங்கிகளில் மாற்றிக் கொள்ள முடியும். அந்த நோட்டுகளை வங்கிகள் நிராகரிக்க முடியாது எனவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. ஏடிஎம்மில் நீங்கள் பணம் எடுத்த நேரம் மற்றும் ஏடிஎம் பெயர் உள்ளிட்டவற்றை குறிப்பிட வேண்டும். ஏடிஎம்மில் இருந்து பெறப்பட்ட சீட்டின் நகலையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். இது போன்ற ஒரு நபர் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரையும் 20 நோட்டுகள் வரையும் மாற்றிக் கொள்ள முடியும்.