கோவை மாவட்டம் மலுமிச்சம்பட்டி ஒங்கிலிபாளையம் சாலையை சேர்ந்த பழனிமுருகன் என்பவர் பெயிண்டிங் வேலை செய்து வருகிறார். இவருடைய மகன் முத்துகிருஷ்ணன் (17) அங்குள்ள அரசு பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வந்தான். இதனிடையே முத்துக்கிருஷ்ணன் அடிக்கடி பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்துள்ளான். இதனை கண்டித்து அவருடைய தாய் பள்ளிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளார்.

இதனால் மனமுடைந்து  காணப்பட்ட முத்துக்கிருஷ்ணன் சம்பவத்தன்று பெற்றோர் வேலைக்குச் சென்ற நேரத்தில் வீட்டில் தனியாக இருந்துள்ளான். பிறகு மாலை பழனி முருகனின் இளைய மகன் பள்ளி முடிந்து வீட்டிற்கு வந்தபோது முத்துகிருஷ்ணன் வீட்டில் உள்ள அறையில் தூக்கில் பிணமாக தொங்கியதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தான். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.